வியாழன், 30 ஜனவரி, 2014

தியாகிகள் தினம்ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.01.2014) தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்ட்து.
அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள், தியாகிகள் தினமாக நாடு முழுமையும் கடைபிடிக்கப்படுகிறது, அதன்படி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னதாக முற்பகல் சரியாக 11.00 முதல் 11.02 வரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் அனைவருக்கும் அமைதி (மௌன) அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்  அனைவராலும் தீண்டாமை உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக