வியாழன், 14 நவம்பர், 2013

குழந்தைகள் தின விழா




இன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் சாட்சா நேரு என்றும் நேரு மாமா என்றும் அனைவராலும் போற்றப்படும் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினவிழா எனும் பெயரில் உலகம் முழுதும் கொண்டாடப்படும் இவ்விழாவின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதோடு, அவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாற்றையும், சுதந்திர இந்தியாவில் அவர் ஆற்றிய மக்கள் முன்னேற்ற பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி குழந்தைகள் பேச்சு, கவிதை, பாடல்கள் ஆகியவை மூலம் குழந்தைகள் தினம் பற்றிய கருத்துக்களை வழங்கினர்.  
அடுத்து விழாவில் சிறப்பு விருந்தினராகக் கிருஷ்ணகிரியில் இருந்து வந்து கலந்துக்கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (அறிவியல்). திருமதி அ. மரியரோஸ் அவர்கள் கட்டுரை, பேச்சு. ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி . நர்மதா நன்றி கூறினார்.





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக