புதன், 13 நவம்பர், 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

                  இன்று கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 
            முற்பகல் துவக்க விழாவில் மாவட்டத் துவக்கக் கல்வி அலுவலர் திரு த.துரைசாமி அவர்களும், பிற்பகலில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(அ.க.இ) திரு பொன்.குமார் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இடைப்பட்ட காலத்தில் அரசு நடுநிலை/உயர்/மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் நான்கு அரங்குகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை தனித்தனி குழுக்களாகச் சமர்பித்தனர். 
               இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஏழு ஆய்வுக் கட்டுரைகள் மாநில அமைப்புக்கு தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக