சனி, 12 அக்டோபர், 2013

பள்ளியில் விஜயதசமி விழாஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்களின் பயண்பாட்டுக்கான மடிக்கணிணிகள், உள்ளிட்ட கற்றல்/கற்பித்தல் பொருட்கள் தூய்மை செய்யப்பட்டது. பின்னர் மாணவர்களின் முழு மகிழ்வோடு விஜய தசமி எனும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கோ.மா. சீனிவாசன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு.சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்..

2 கருத்துகள்: