சனி, 7 செப்டம்பர், 2013

ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்தல்இன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறை சார்பான ஆசிரியர் தின விழாவில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த செ.இராஜேந்திரன் (ஜோதிநகர்), மோ.சிதம்பரம் (கோடாலிவலசை), மா. கிருஷ்ணமூர்த்தி (ஊ.ரெட்டிப்பட்டி) மாம்.கி.ஞானசேகரன்(பெருமாள் நாயகன்பட்டி), நா..ஜோதி (கொட்டாரப்பட்டி), வீ.சரஸ்வதி (நாப்பிராம்பட்டி), இரா. தாசூன் (படப்பள்ளி), இரா. ரேணுகா (மல்லிப்பட்டி), ஜெ. மங்களம் (கிட்டம்பட்டி), இர. நிர்மலா (இலக்கம்பட்டிகாலணி) ஆகிய 10 துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு மு.இராமசாமி, அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன். குமார், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி, கிருஷ்ணகிரி மாவட்டக் க்ல்வி அலுவலர் திரு க. அன்பு ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திரு இரா. பிரசாத், திரு கொ.மா. சீனிவாசன் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்களும் பிறதுறை அலுவலர்களும் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக