புதன், 18 செப்டம்பர், 2013

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக் கண்காட்சிகிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான  புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக் கண்காட்சி கடந்த 26.06.2013 அன்று கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 201 நடுநிலைப் பள்ளிகள் இக் கண்காட்சியில் கலந்துக்கொண்டன.

     முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு டி.பி. இராஜேஷ் அவர்கள் கலந்துக்கொண்டு கண்காட்சியைத் துவக்கி வைத்தார். அவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு மு. இராமசாமி, அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார், மாவட்டத் துவக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் திரு . அன்பு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் திரு இரா. நடராஜன்,  மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு. மோ. மகேந்திரன் மற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
     கண்காட்சியில் மாவட்டத்தின் 10 ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தமது புத்தாக்க படைப்புகளை ஒன்றிய வாரியாக வைத்திருந்தனர். அவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. கண்காட்சியில் வைத்திருந்த பெரும்பாலான படைப்புகள் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரித்து பயன்படுத்தும் படைப்புகளாகவே அமைந்திருந்தது தற்போதைய எதார்த்த சூழலை வெளிப்படுத்தியதோடு அதற்கான தீர்வை சொல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது அனைத்து படைப்புகளும் செயல்முறைப் படைப்பாகவே (WORKING MODELS) அமைந்திருந்ததால் அவற்றை சம்மந்தப்பட்ட மாணவர்கள் செயல்விளக்கம் செய்துக்காட்டினர். காலை முதல் மாலை வரையில் நடைபெற்ற இக்கண்காட்சியை அருகில் உள்ள பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கண்டுகளித்தனர்.
     மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தேர்வுக் குழுவால் சிறந்த படைப்புகளாகத் தேர்வு செய்யப்பட்ட 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக