சனி, 13 அக்டோபர், 2012

திறன் வளர் போட்டிகள்

                   ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி மாணவர்களுக்கான திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டது.
                     பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்பு மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு  பங்கேற்றனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுநர் திருமதி இரா. ஆர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
                       இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திடு ப.சரவணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி  ஆசிரியர்கள் திருமதி  சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திரு வே. வஜ்ரவேல் ஆகியோர் செய்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக