வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்
               ஊத்தங்கரை ஒன்றிய அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஊத்தங்கரை துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி கே.பி.மகேஸ்வரி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புக் கருத்துரை வழங்கினார்கள். அப்போது அவர் தமது கருத்துரையில் ஆசிரியர்கள் பணியில் எவ்விதக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டாமல் இயல்பாகவும் எதார்த்தமாகவும் தமது கருத்துக்களை வெளிபடுத்தியமை அனைவரையும் கவர்ந்தது.
              மாவட்ட அலுவலர் ஒருவர் இதுபோல் அவ்வப்போது தமது கீழ்நிலை
அலுவலர்களைச் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டால் அனைவருமே தத்தமது பணியில் சிறப்புடன் செயல்பட ஊக்கம் அளிப்பதாய் அமையும்.           கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக