வெள்ளி, 16 மார்ச், 2012

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் துவக்க விழா.


ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறு வள மையத்தில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் துவங்கியது.
            மைய  ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக மைய பொருப்பு ஆசிரி்யப் பயிற்றுநர் திரு க. சண்முகம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு ச.வரதராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். மேலும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன், ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு கோட்டீஸ்வரன், ஆசிரியப் பயிற்றுநர் திரு பாக்கியராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

        3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் கெங்கபிராம்பட்டி, ஜோதிநகர், கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, ஆகிய நடுநிலைப் பள்ளிகள், உப்பாரப்பட்டி உயர்நிலைப் பள்ளி, மண்ணாண்டியூர், தாண்டியப்பனூர், அப்பிநாயக்கன்பட்டி, பேயனூர், சின்னக் குன்னத்தூர், உப்பாரப்பட்டி,சந்தக்கொட்டாவூர் துவக்கப் பள்ளிகள் என 12 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

                                      இப் பயிற்சி முகாமில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதைச் செயற்படுத்துவதில் பெற்றோரின் பங்கு, பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள் , குழந்தைகளின் உரிமைகள் போன்ற பல்வேறு கருத்துக்கள் பற்றி கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
             ஒவ்வோர் நிகழ்வின் போதும் பள்ளி மாணவர்களின் திறன் வெளிபாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது  இதைக் கண்ணுற்ற பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பெரு மகிழ்வு கொண்டனர்.
         இறுதியில் மைய உதவி ஒருங்கிணைப்பாளர் திரு பி. சிவன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.


                                      சனி, 10 மார்ச், 2012

அகில உலக மகளிர் தின விழா.

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் அகில உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பத்மா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கணகராணி மின்னிலை வகித்தார்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்வர்கள் தனது வரவேற்புரையில் அகில உலக மகளிர் தின வாழ்த்துக்க்ளை அனைவருக்கும் கூறிவிட்டு மகளிர் தினத்தின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாற்றுச் செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் மகளிர் தினம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினர், அடுத்து சாதணைப் பெண்மணிகள் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், அன்னை தெரெசா, அன்னிபெசண்ட் அம்மையார், இந்திரா காந்தி, மருத்துவர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எடுதுரைத்து அவர்களின் சாதனைகளையும் அதற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்திரைத்தனர். பின்னர் கீழ் வகுப்பு மாணவர்கள் பெண்கல்வி குறித்த பாரதிதாசனின் பாடல்களை சிறப்பாக பாடிக் காட்டினர். இவ்விழாவில் பங்கு பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பெற்றோர்களும் மிக்க மகிழ்வோடு காணப்பட்டனர். 
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர்    திரு ப.சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திருமதி வே. கஸ்தூரி. திரு. வஜ்ரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.