வெள்ளி, 11 நவம்பர், 2011

இலவசத் தனிப்படிப்பு மையத் துவக்கவிழா.......

                  இன்று 09.11.11 எமது பள்ளி கிராமமான கொட்டுகாரம்பட்டியில் புதியத் தலைமுறை அறக்கட்டளையின் கிராமப்புற கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இலவச தனிப்படிப்பு மையம் (FREE TUTION CENTER) துவக்கப்பட்டது.
                  முன்னதாக    மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மையப் பொருப்பாசிரியர்களில் ஒருவரான திருமதி அனிதா வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு பி.சக்திவேல் அவர்கள் புதிய தலைமுறை அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி மாதம்மாள் அவர்கள் வாழ்த்து கூற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் திரு டி.எல் சின்னசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் பொருப்பாசிரியர்களில் ஒருவரான செல்வி க. கலையரசி அனைவருக்கும் நன்றி கூறினார்.
                     இம்மையத்தில் 5 முதல் 10 வகுப்பு வரையில் பயிலும் 50 மாணவர்கள் பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் படிப்பது என்பது அரிதான செயல். எனவே இது போன்ற மையங்கள் மிகுந்த பயனை விளைவிக்கும் என்பது உறுதி.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக