செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

கல்விச் சுற்றுலா

அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவசக் கல்விச் சுற்றுலாவில் எமது பள்ளி மாணவர்கள்.


                 அனைவருக்கும் கல்வித் திட்ட  மாநில திட்ட இயக்குநரின் அறிவுரையின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கான இலவசக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் சென்னை, மாமல்லபுரம் ஆகியவற்றிற்கும் வட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
                       அவ்வகையில் எமது கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அழைத்துச் செல்லப்பட்ட குழுவில் ஊத்தங்கரை ஒன்றியம் சார்பில் எமது பள்ளி மாணவர்கள் எட்டு பேர் இடம் பெற்றனர்.
                             அவர்கள் 09.02.2010 இரவு 9.30 மணிக்கு தருமபுரி தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீள 12.02.2010 2.30 மணிக்கு நலமுடன் தருமபுரி வந்து சேர்ந்தனர்.
                   இடையில் தஞ்சை சாகுந்தலா மஹால், பிரகதீசுவரர் ஆலயம், மராட்டியர் அரண்மனை, கல்லணை, சுவாமிமலை, சித்தன்ன வாசல், தாராசுரம், ஸ்ரீரங்கம், முக்கொம்பு ஆகியவற்றைக் கண்டு களித்தனர்.


அன்புடன்............
>
கவி.செங்குட்டுவன்,
>
ஊத்தங்கரை - 635207.
>
அலைபேசி : 9842712109 / 9965634541,
>
தொலைபேசி : 04341- 223011 / 223023.
>
மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in
> / kavi.senguttuvan@gmail.com
>
வலைப்பூ :
> http//pumskottukarampatti.blogspot.com

2 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதமான பணி செய்து வருகிறீர்கள். இதைப் போலவே நான் படித்த பள்ளிக்கும் ஒரு வலைப்பூ தொடங்க இருக்கிறேன். பள்ளி நிர்வாக அனுமதிக்குப் பிறகு எங்கள் பள்ளியின் செயல்பாடுகள், தகவல்களை வலையேற்றம் செய்ய இருக்கிறோம். உங்கள் வலைப்பூ மிக அருமை. என்னை உற்சாகப்படுத்துகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அறப் பணி செய்து வருகிறீர்கள்.ஆசிரியர்களுக்கு ஈடுபாடு இருப்பினும் தலைமையாசிரியர் சிறப்பாக செயல்பட்டால்தான் உயர்வினைக் கொணர முடியும்.
    இங்கே நீங்களே தலைமையாசிரியராக இருப்பது சிறப்பான செயல்பாட்டுக்கு வழி வகுப்பதாய் அமைகிறது.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு