வியாழன், 9 டிசம்பர், 2010

எமது பள்ளி........,









ஒன்றிய அளவில் சிறப்பிடம்

ஒன்றிய அளவில் சிறப்பிடம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் எமது பள்ளி மாணவர்கள் எட்டு முதல் பரிசுகளும், ஆறு இரண்டாம் பரிசுகளும், ஐந்து மூன்றாம் பரிசுகளும் ஆக மொத்தம் 19, பரிசுகளைப்  பெற்று ஒன்றிய அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன், ஆசிரியர்கள் பி.பாண்டுரங்கன், சே.லீலாகிருஷ்ணன், ந.இராஜசூரியன், சி. தாமரைசெல்வி ஆகியோரும் பள்ளிக் கல்விக் குழுத் தலைவர் இராதா நாகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி. திருவேங்கடம் ஆகியோரும் பாராட்டினர்


செவ்வாய், 16 நவம்பர், 2010

எமது பள்ளி முப்பெரும் விழா



               
                                              முப்பெரும் விழா
             எமது பள்ளியில் ”அறிவியல் கண்காட்சி துவக்க விழா, பள்ளி மாணவர் மலர் வெளியீட்டு விழா, குழந்தைகள் தின விழா” உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
    விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இரா. மனோகரி பள்ளி அறிவியல் கண்காட்சியத் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர் மலர் “மழலை முத்துக்கள்” இதழை ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் அ.யுவராஜ் வெளியிட ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே.எம்.சீனிவாசன், பெற்றொர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி.திருவேங்கடம், கட்டிடக் குழுத் தலைவர் கி.மோகன். கே.எம்.எத்திராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி ஆசிரியர் பி.பாண்டுரங்கன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் தாமரைச்செல்வி, லீலாகிருஷ்ணன், இராஜ சூரியன் ஆகியோர் செய்தனர்.

அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடல்.........


விழாவில் பள்ளித் தலைமையாசிரியரின் வரவேற்புரை..........
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரின் வாழ்த்துரை...............

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்குதல்.................

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்குதல்.................
பள்ளி மாணவர் மலர் “மழலை முத்துக்கள்” வெளியீடு..............



 மாணவர்களுக்கு பரிசளிப்பு....................

 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிறப்புரை.............

 விழாவில் கலந்துக் கொண்டோருக்கு நன்றியுரை........
 பள்ளியின் மூலிகைத் தோட்டத்தை பார்வையிடும் சிறப்பு அழைப்பாளர்கள்......

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அண்ணா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள்



பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்குபெற்று அதிக எண்ணிக்கையிலான பரிசுகளைப் பெற்றனர்.                    
             சதுரங்கப் போட்டியில் ஜூனியர் ஆண்கள், சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள், சப் ஜூனியர் பெண்கள் ஆகிய   அனைத்து பிரிவுகளிலும் எமது பள்ளி மாணவர்களே முதலிடம் பெற்று பரிசுகளை வென்றுள்ளனர். மேலும் ஜூனியர் மகளிர் வளைப் பந்து போட்டியில் முதலிடமும்,  ஜூனியர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், சப் ஜூனியர் பெண்கல் கேரம் போட்டியில் முதலிடமும், ஜூனியர் ஆண்கள் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.     










ஓசோன் தினம்



எமது பள்ளியில் தேசியப் பசுமைப் படை மூலம் ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது மாணவர்கள் புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி வந்தனர்.
           பின்னர் பள்ளி வளாகத்தின் உள்ளே மற்றும் பள்ளி வளாகத்தின் வெளியே மரக் கன்றுகள் நடப்பட்டது.


பள்ளிச் சிறார் மருத்துவ முகாம்



எமது பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திருமதி. உஷாதேவி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவப் பரிசோதணை மேற்கொண்டனர். அப்போது 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விட்டமின் ஏ மருந்து அளிக்கப்பட்டது. மேலும் சிறு உடல்நலக் குறை கண்ட மாணவர்களுக்கு மாத்திரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இரண்டு மாணவர்கள் மேல் சிகிட்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.