புதன், 18 நவம்பர், 2009

கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா !இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
       விழாவில் முன்னதாக  உதவி ஆசிரியர் சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு. அ.வி. விஜயகுமார் அவர்கள் கணினி வழிக் கல்வி மையத்தைத்  துவக்கி வைத்தார். இதன் மூலம் இப்பள்ளியின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் கணினி பற்றிய கல்வியையும், கணினி மூலம் குறுந்தகடு வழி கல்வியையும் பெற்று தமது திறனை மென்மேலும் உயர்த்திக் கொள்ள உதவும் என்பது தின்னம்.
      விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணினி வழிக் கல்வி மைய பொறுப்பாசிரியர் திருமதி சி. தாமரைச் செல்வி  செய்தார். இறுதியில் உதவி ஆசிரியர் சி. சிவா நன்றி கூறினார்.
          
            

4 கருத்துகள்:

 1. அன்புள்ள ஐயா வணக்கம்
  தங்கள் முயற்சி வெல்க.தொடர்க தங்கள் தமிழ்ப்பணி.
  அனைவருக்கும் வலைப்பூ உருவாக்க பயிற்சி வழங்கவும்.கீழுள்ள இணைப்பைப் பார்த்து மகிழவும்.
  http://muelangovan.blogspot.com/
  நான் திசம்பர் 19 இல் ஊத்தங்கரை அருகில் வரும் வாய்ப்பு உள்ளது.தமிழ் இணையம் சார்ந்து பல பணிகள் செய்கிறேன்.இயன்றால் சந்திப்போம்.
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி
  பேசி: 9442029053

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  தங்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறோம்.
  வரும் 19திசம்பர் அந்தப் பகுதியில் நடக்கும் ஒரு கருத்தரங்கிற்கு வருகிறேன்.
  சந்திக்க விரும்புகிறேன்.
  தங்கள் செல்பேசி எண் தேவை.
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி
  9442029053

  பதிலளிநீக்கு
 3. தங்களின் செயல்பாடு போற்றுதலுக்குரியது.அரசுப் பள்ளியில் இத்தகைய செயல்பாடுகள் அற்புத நிகழ்வுகளே.உங்கள் பணி சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு