வெள்ளி, 25 டிசம்பர், 2009

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (௨௩.௧௨.௨௦௦௯?) ல் பள்ளியின் சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அதன் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரு. செஇராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தற்போது உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான கருத்துருக்களை தற்போது தயாரித்து அனுப்ப வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்காக புதிதாக அமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடக் குழு பற்றியும், பெற்றொர்களும் பொது மக்களும் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
               கூட்டத்தில் கலந்துக்கொண்ட கிராமக் கல்விக் குழுத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜ் அவர்கள் பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துரைகள் வழங்கிய பின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மற்ற உறுப்பினர்கள் மற்றும் பொருப்பாளர்களின் கருதுரைக்குப் பின் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
தீர்மானம் :   1
      நமது கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட கருத்துருக்களை தயார் செய்து தலைமையாசிரியர் மூலம் அனுப்பி வைத்திடல்.
தீர்மானம் : 2
    அரசாங்கத்தால் உயர்நிலைப் பள்ளி ஒதுக்கீடு செய்திடும் நிலையில் அப்பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தல்.
தீர்மானம் : 3
      புதிய உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒருமனதாக அமைக்கப்பட்ட கீழ்க் கண்ட பள்ளி கட்டிடக் குழுவிற்கு ஒப்புதல் அளித்து அக்குழு சிறப்பாகச் செயல்பட தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தல்.

  புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடக் குழு விபரம் :
தலைவர் :                                   திரு. கோ.மோகன் நாயுடு
துனைத் தலைவர் :                திரு.கே.எம். எத்திராஜ்
செயலாளர் :                               திரு.கேபி.திருவேங்கடம்
துணைச் செயலாளர் :           திரு. சி.காந்தி
பொருளாளர் :                             திரு. வே.மாதவன்.
      
             கூட்டத்தில் முன்னாள் உராட்சித் தலைவர் மாதவன் உள்ளிட்ட பெற்றோர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
                  இறுதியில் உதவி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


ஞாயிறு, 20 டிசம்பர், 2009

அன்புள்ள திரு. இராஜேந்திர கவி அவர்களுக்கு,

தங்கள் கல்விக்கோவிலின் முக்கிய நிகழ்வுகளை இனிய எளிய தமிழில் நன்றாக கூறியுள்ளீர்கள். உங்கள் கல்விக்கோவிலில் பயிலும் மாணவ \ மாணவிகள் நல்ல முறையில் முன்னேற இறைவனை வேண்டுகின்றேன். தங்களது இந்த நல்ல நோக்கமும் தொண்டும் மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,
இராமச்சந்திரன்.

S.A. Ramchandar
Navi Mumbai.

வெள்ளி, 18 டிசம்பர், 2009


இன்று(18.12.2009 )  ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையப் பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.கவி.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.உதவித் தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால், ஆர்.தருமலிங்கம், கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிலரங்கை புதுவை பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் திரம்பட நடத்தினார். மாணவர் மனநிலை அறிந்து அவர்களுக்கேற்ற எளிய தமிழில் நடத்திச் சென்றமை வரவேற்புக்குறியது.
இப்பயிலரங்கில் கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர். தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு, மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர். மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

புதன், 18 நவம்பர், 2009

கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா !இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
       விழாவில் முன்னதாக  உதவி ஆசிரியர் சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு. அ.வி. விஜயகுமார் அவர்கள் கணினி வழிக் கல்வி மையத்தைத்  துவக்கி வைத்தார். இதன் மூலம் இப்பள்ளியின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் கணினி பற்றிய கல்வியையும், கணினி மூலம் குறுந்தகடு வழி கல்வியையும் பெற்று தமது திறனை மென்மேலும் உயர்த்திக் கொள்ள உதவும் என்பது தின்னம்.
      விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணினி வழிக் கல்வி மைய பொறுப்பாசிரியர் திருமதி சி. தாமரைச் செல்வி  செய்தார். இறுதியில் உதவி ஆசிரியர் சி. சிவா நன்றி கூறினார்.
          
            

சனி, 14 நவம்பர், 2009

குழந்தைகள் தினவிழா !


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஊத்தங்கரை ஒன்றிய வள மேற்பார்வையாளர் திரு.அ.வி.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.விழாவில் ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு, கோவிந்தராஜ், கிராமக் கல்விக் குழுத்தலைவர் திரு இராதா நாகராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு திருவேங்கடம்,துணைத் தலைவர் திரு எத்திராஜ்,செயற்குழு உறுப்பினர் துரு முருகன் உள்ளிட்ட பெற்றோர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்ற சு.பிரியா,மு.தங்கவேல் ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு சே.லீலாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


புதன், 28 அக்டோபர், 2009

சர்வதேச கைகள் கழுவும் நாள்.

ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளியில் இன்று சர்வதேச கைகள் கழுவும் நாள் கடைபிடிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களின் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீள பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் கைகள் சோப்பு போட்டுக் கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கிராமச் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வாசகங்களைமுழங்கினர்.
பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சர்வதேச கைகள் கழுவும் நாள் தொடர்பான செய்திகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சரியான கைகள் கழுவும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார்.
அதன் பின்னர் பள்ளி மாணவர்கள் சரியான கைகள் கழுவும் முறையை செய்முறை விளக்கம் மூலமாக மாணவர்களுக்கு செய்துக் காட்டினர்.

காண்போம் கற்போம்


காண்போம் கற்போம் நிகழ்சியைக் காணும் பள்ளி மாணவர்கள்.......

சுகாதார விழிப்புணர்வுப் போட்டி.
ஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சுகாதாரப் போட்டிகள் நடைபெற்றது. சுகம் தரும் சுத்தம் என்ற தலைப்பில் பேச்சு,கட்டுரை,ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. ஒன்றியஅளவில் 21 பள்ளிகள் பங்கு பெற்ற இப்போட்டிகளில் கொட்டுகாரம்பட்டிநடுநிலைப் பள்ளி மாணவி சு.பிரியா கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், மு.தங்கவேல் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்று ஒன்றிய அளவில் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் மற்றும் உதவி ஆசிரியர்கள் சி.சிவா, சே.லீலாகிருஷ்ணன், சி.தாமரைச் செல்வி ஆகியோரும் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் பாராட்டினர்

புதன், 2 செப்டம்பர், 2009

பள்ளியில் 01.09.2009 - ல் நடைபெற்ற கிராமக் கல்விக் குழு நாள் விழா, ஆசிரியர் தின விழா, சாதனை மாணவிக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாக் காட்சிகள்.
விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கும்ஆசிரியர் தினவிழா நினைவுப் பரிசுகளை பள்ளி ஆசிரியர்களுக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் திரு.சி செங்குட்டுவன் அவர்கள் வழங்கிடும் காட்சி.
பள்ளியில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் காட்


தேசியத் திறனாய்வுத் தேர்வு 2009 -ல் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவியாய் (நடுநிலைப் பள்ளிகள் அளவில்) சாதனை படைத்த மாணவி மு. சூரியப்ரியா விற்கு நினைவுப் பரிசுகள் வழங்கும் காட்சி.

விழாவில் கலந்துக்கொண்ட பெற்றோர்கள்.ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேளாளர் திரு எம்.நவீந்தரன் அவர்களின் சிறப்புரை
ஓய்வு பெற்ற நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு மு. முருகேசன் அவர்களின் வாழ்த்துரை.

இளைஞர் செஞ்சிலுவச் சங்க மாவட்ட இணை கன்வீனர் அவர்களின் சிறப்புரை.
இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் அவர்களின் சிறப்புரைக் காட்சிகள்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் வரவேற்புரை.